தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி கொலை; 8 தனிப்படைகள் அமைப்பு - என்ன நடந்தது?
தோப்பு வீட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை கொலை
ஈரோடு, சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகனும், மகளும் தனியாக வசித்து வரும் நிலையில், ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
தொடர்ந்து ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மகன் போன் மூலம் அழைத்ததில், தந்தை எடுக்காததால் உறவினர்களை அங்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
பின்னணி என்ன?
அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும்,
வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதனையடுத்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
