Wednesday, May 21, 2025

பட்டப்பகலில் தம்பதி கொடூர கொலை - 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் துயரம்

Attempted Murder Crime Salem
By Sumathi 9 days ago
Report

முதிய தம்​ப​தி​யைக் கொன்​று, நகைகளைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

நகை கொள்ளை

சேலம் சூரமங்​கலத்தை அடுத்த ஜாகீர் அம்​மா​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பாஸ்​கரன் (65). இவரது மனைவி வித்யா (60). தனது வீட்​டின் ஒரு பகு​தி​யில் மளி​கைக் கடை நடத்தி வந்துள்ளனர்.

பாஸ்​கரன் - வித்யா

இந்நிலையில், பாஸ்​கரனும் வித்​யா​வும் வீட்​டில் ரத்த வெள்​ளத்​தில் கிடந்​துள்ளனர். இதைக் கண்ட அப்​பகுதி மக்​கள் அதிர்ச்​சி​யடைந்​து, போலீ​ஸாருக்​குத் தகவல் அளித்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீஸார், இறந்த வித்யாவின் உடலை மீட்டு, பலத்த காயத்​துடன் இருந்த பாஸ்​கரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வீட்டிற்கு தெரியாமல் திருமணம்; பாத்ரூமில் குழந்தை பெற்ற பெண் - நேர்ந்த துயரம்

வீட்டிற்கு தெரியாமல் திருமணம்; பாத்ரூமில் குழந்தை பெற்ற பெண் - நேர்ந்த துயரம்

தம்பதி கொலை

ஆனால், வழி​யிலேயே அவர் உயி​ரிழந்​தார். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வித்யா அணிந்​திருந்த நகைகள் மாய​மாகி இருப்​பது தெரிய வந்​தது. மேலும், கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் தம்பதி கொடூர கொலை - 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் துயரம் | Elderly Couple Murdered Salem Update

இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். கடன் பிரச்சினை காரணமாக இருவரையும் அடித்து கொலை செய்ததாகவும், அவர்களிடம் இருந்து 10 சவரன் செயினை எடுத்துச் சென்றதாகவும் சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.