மோடி பிரச்சாரத்தால் தான் தோல்வி - ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி
பாஜக பிரச்சாரத்தால் தான் மகாராஷ்டிராவில் பின்னடைவை சந்தித்துள்ளோம் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா
நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி மகாராஷ்டிராவில் மிக அதிகமான தொகுதிகளில் வெல்வோம் என எதிர்பார்த்து இருந்தனர். தேர்தல் முடிவுகள் நேர் மாறாக அமைந்ததால் கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் சரத் பவரின் தேசியவாத காங்கிரஸுக்கு தாவினார்.
மோடி பிரச்சாரம்
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவையில் போதிய பிரதிநித்துவம் இல்லையென ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது பாஜக மற்றும் மோடியின் பிரச்சாரமே மகாராஷ்டிராவில் தோல்விக்கு காரணம் என குற்றம்ச்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர், பாஜக 400 க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என பிரச்சாரம் செய்தனர்.
இந்த பிரச்சாரத்தால் , பாஜக 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிவிடுவார்கள், இடஒதுக்கீட்டை மாற்றி விடுவார்கள் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. எதிர்க்கட்சிகளும் அதை மையப்படுத்தியே தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்
நீட் தேர்வு எதிர்ப்பு
சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வு முடிவால் மகாராஷ்டிரா மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதனால் உடனே ரத்து செய்ய வேண்டுமென மகாராஷ்டிரா மாநில அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டணி கட்சியினரின் இச்செயல் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.