வரலாறு காணாத உச்சம் தொட்ட முட்டை விலை - ஏன், எவ்வளவு தெரியுமா?
முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்துள்ளது.
முட்டை விலை
தமிழ்நாடு, கேரளத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள், வடமாநிலங்களில் கடும் குளிர் காரணமாக முட்டை விலை அதிகரித்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் இருந்து நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன.
பல நேரங்களில் முட்டை விலை உயர்வும், சரிவும் தொடர்ந்து வந்தன. தொடர்ந்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
5 பைசா உயர்வு
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகால வரலாற்றில், ஒரு முட்டையின் விலை தற்போதுதான் அதிகபட்சமாக ரூ. 5.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.