முட்டை கூட வாங்கமுடியல; முகத்திற்கு முன்னாடியே விளாசிய முதியவர் - மன்னிப்பு கேட்ட புதின்!

Vladimir Putin Russia
By Sumathi Dec 18, 2023 09:59 AM GMT
Report

முட்டை விலை குறித்து முதியவர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை விலை 

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். கடந்த ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதனால், பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தொடர்ந்து, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

putin apologise

அதிகரித்து வரும் பணவீக்கம் அடுத்த பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.

கண்பார்வை மங்கி, உணர்ச்சியற்று போன நாக்கு - மரண பிடியில் புதின்!

கண்பார்வை மங்கி, உணர்ச்சியற்று போன நாக்கு - மரண பிடியில் புதின்!

புதின் மன்னிப்பு

மேலும், அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடையால் பல நாடுகளும் ரஷ்யாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் புதின் நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவார்.

vladimir putin

மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார். அந்த வகையில், முதியவர் ஒருவர் நாட்டில் முட்டை, கோழி இறைச்சி கூட விலை உயர்ந்து விட்டதாகவும், சாமானியர்கள் முட்டை வாங்கவே சிரமப்பட வேண்டியது உள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு புதின், ”நான் மன்னிப்பு கேட்கிறேன்.

ஆனால் இது அரசு பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு நல்ல சூழ்நிலை உருவாகும்” எனக் கூறியுள்ளார்.