மோடியை மிரட்டி பணியவைக்க முடியாது...! ரஷ்யா அதிபர் புதின் புகழாரம்..!!
இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய முடியாது என ரஷ்யா புதின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மிரட்ட முடியாது
ரஷ்யாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான விடிபி சார்பில் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ‘ரஷ்யா அழைக்கிறது' என்ற முதலீட்டாளர்கள் மாநாடு அண்மையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவரிடம் இந்தியா - ரஷ்யா நாடுகளின் இடையேயான உறவு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்தியாவின் நலன், இந்திய மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி பணிய வைக்க முடியாது என்றும் அவர் யாருக்கும் அஞ்ச மாட்டார் என்று புகழாரம் சூட்டினார்.
கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது
மோடியை அச்சுறுத்த முடியும் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது என்று அதிரடியாக கருத்து தெரிவித்த புதின், உண்மையை சொல்வதென்றால் இந்தியாவின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் கடினமான முடிவுகளை பார்த்து தான் வியப்பில் ஆழ்வதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கடைபிடிக்கும் உறுதியான கொள்கைகளே இரு நாடுகளின் வலுவான உறவுக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.