உச்சத்தை தொட்ட முட்டை விலை! அதிர்ச்சியில் முட்டை பிரியர்கள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
உயர்ந்தது முட்டை விலை
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி ரூ.4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தற்போது முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தி ரூ.5.55 காசுகளாக நிர்ணயித்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், வடமாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்ததால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.