சகோதரர் அஜித்குமார் பூரண நலம் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Ajith Kumar Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Tamil Actors
By Jiyath Mar 08, 2024 11:08 AM GMT
Report

நடிகர் அஜித் பூரண நலம்பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித்குமார்

மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சகோதரர் அஜித்குமார் பூரண நலம் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! | Edappadi Palansamy Wishes Ajith Speed Recovery

வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் அஜித்குமாருக்கு அளிக்கப்பட சிகிச்சை குறித்து அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார்.

கேரள மாநில பள்ளியில் 'ஏஐ' ஆசிரியை - மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து அசத்தல்!

கேரள மாநில பள்ளியில் 'ஏஐ' ஆசிரியை - மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து அசத்தல்!

எடப்பாடி பழனிசாமி 

காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சகோதரர் அஜித்குமார் பூரண நலம் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! | Edappadi Palansamy Wishes Ajith Speed Recovery

அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.