பெரும் அச்சத்தில் மக்கள்; என்ன செய்யப் போகிறார் மு.க.ஸ்டாலின்? ஈபிஎஸ் கேள்வி!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath May 28, 2024 01:57 PM GMT
Report

போதை ஆசாமிகளால் காவல் துறையினரே தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் அச்சத்தில் மக்கள்; என்ன செய்யப் போகிறார் மு.க.ஸ்டாலின்? ஈபிஎஸ் கேள்வி! | Edappadi Palansamy Question To Cm Mk Stalin

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை ஆசாமிகள் காவல்துறையினரையே பொதுவெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிக்கிறது.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

வலியுறுத்தல் 

கையாலகாத விடியா திமுக ஆட்சியாளர்களும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது. இத்தகையவர்களால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு பெரும் பயமும் அச்சமும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

பெரும் அச்சத்தில் மக்கள்; என்ன செய்யப் போகிறார் மு.க.ஸ்டாலின்? ஈபிஎஸ் கேள்வி! | Edappadi Palansamy Question To Cm Mk Stalin

என்ன செய்யப் போகிறார் காவல்துறையை கையில் வைத்திருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்? இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து , சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.