கோவில் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Festival Madras High Court Viluppuram
By Sumathi May 14, 2024 03:42 AM GMT
Report

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடல் பாடல் நிகழ்ச்சி

விழுப்புரம், பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி காவல்நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

aadal paadal

ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது.

ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது - கடும் கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்!

ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது - கடும் கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவு

அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாஸ்கரன், மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார். அதன்பின், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.

madras high court

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், சட்டத்துக்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.