டெல்லி விமான நிலையத்தில் ஆடல், பாடலுடன் கலைகட்டிய தீபாவளி... - வைரலாகும் வீடியோ...!

Diwali Viral Video Delhi
By Nandhini Oct 25, 2022 05:56 AM GMT
Report

டெல்லி விமான நிலையத்தில் ஆடல், பாடல் என்று தீபாவளி கொண்டாட்டப்பட்டது. அது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வண்ண, வண்ண உடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.

கடந்த சில வாரங்களாக தீபாவளியையொட்டி கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்தது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பட்டாசு வாங்கி வெடிக்க தடை

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும், பட்டாசு தயாரித்தல், பட்டாசு விற்பனை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

delhi-diwali-viral-video

டெல்லி விமான நிலையத்தில் தீபாவளி கொண்டாட்டம்

இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி, டெல்லி விமான நிலையத்தில் தீபாவளி விழா கொண்டாட்டப்பட்டது.

வரலாற்று சிறப்பு வாழ்ந்த ராமாயணத்தை மையமாக வைத்து நடனக் கலைஞர்கள் விமான நிலையத்தில் நாடகங்களை நடத்தினர். விமான நிலையத்திற்கு வந்தவர்கள் இந்த நாடகங்களை கண்டு மகிழ்ந்தனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.