ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது - கடும் கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்!

Tamil nadu Madurai Festival
By Sumathi Nov 05, 2022 11:33 AM GMT
Report

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடக்கூடாது என மதுரை நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆடல், பாடல் 

மதுரை, மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் மதுரை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை, மேலப்பட்டியில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது - கடும் கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்! | Restrictions On Karakatam Madurai Court

அதற்கு வருகிற 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி கோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்துள்ளோம். எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும், போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்.

கட்டுப்பாடுகள்

இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கூடாது, நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது.

சாதி அடிப்படையில், எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடும் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.