Sunday, May 11, 2025

ஆபாச நடனம்.. ராம்லீலா நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை!

Viral Video Uttar Pradesh
By Sumathi 3 years ago
Report

ராம்லீலா நிகழ்ச்சியின் மேடையில், ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராம்லீலா நிகழ்வு 

உத்தரப் பிரதேசம், சம்பல் மாவட்டத்தில், ராம்லீலா நிகழ்வு நடைபெற்றது. அந்த நாடகத்தின் போது, மேடையில், ஆபாசமான வகையில் சில நடனக் கலைஞர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

ஆபாச நடனம்.. ராம்லீலா நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை! | Indecent Dance In The Ramlila Stage At Sambhal

அந்த வீடியோவில், ராவணனாக வேடமிட்டவர் மேடையில் அமர்ந்திருக்க அவரை நோக்கி அந்த நடனக் கலைஞர்கள் ஆபாசமான வகையில், நடனமாடி நகையாடுகின்றனர். மேலும், கலைஞர்கள் ஆபாசமாக நடனமாடும்போது,

ஆபாச நடனம்

கீழே இருந்த பார்வையாளர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டுள்ளனர். வயதானவர்களை தங்களுடன் ஆடுமாறு மேடையேற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீது சம்பல் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதுமட்டுமின்றி, ஆபாச நடனமாடிய சில கலைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பொதுவெளிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.