விசிக மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக? தேர்தல் கூட்டணி - இபிஎஸ் சொன்ன பதில்!
விசிக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
விசிக மாநாடு
கள்ளக்குறிச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதில் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும்
இபிஎஸ் விளக்கம்
மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதிமுக கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரணி; மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நல்ல மனம் உடையவர்கள் அதிமுகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வோம்; அவர்களுடன் சேர்ந்து அதிமுக சிறந்த ஆட்சியை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார் திருமாவளவன்.
படிப்படியாக மது ஒழிப்பைக் கொண்டுவருவதற்கான கோரிக்கையை முதல்வரிடத்தில் வைத்ததாகத் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் தி.மு.க சார்பில் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.