திமுக போராட்டம் நடத்தியதற்கு காரணம் மத்திய பட்ஜெட் இல்ல.. - EPS பரபரப்பு தகவல்!
தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் அதிகரிப்பால், கொலைகளும் அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்நடைப்பெற்றது. இந்த நிலையில் ,போராட்டம் நடத்தியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் அதிகரிப்பால், கொலைகளும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் நெல்லையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் ஜெயக்குமார் மரண வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஜனவரி 1 முதல் தற்போதுவரை 595 கொலைகள் நடந்துள்ளதாக என்று குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து பேசிய அவர் ,'' ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை எதிர்ப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதும், மறுபுறம் தனக்குச் சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக்கொள்வதுமாக திமுக தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றி வருகிறது.
மேலும் விலைவாசி உயர்வு ,போதைப்பொருட்கள் அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் திமுக மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு மீது போராட்டத்தை நடத்தியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.