முதல் ஆளாக வந்த உதயநிதி...துவங்கியது திமுக போராட்டம்
நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் உண்ணவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
திமுக உண்ணாவிரத போராட்டம்
சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு மீண்டும் தீவிரமாகி இருக்கிறது.
இன்று, நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகியவற்றின் சார்பில் இந்த போராட்டம் துவங்கியுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி
இந்நிலையில் தான் தற்போது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக முதல்வர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியன், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.