மருத்துவமனையில் ஆதரவாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்யப்படுவதாக நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி
ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த அதிமுக ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
ராமனாக அண்ணன் எடப்பாடி , லட்சுமணனாக ஒன்றரை கோடி தொண்டர்கள் : ஆர்.பி.உதயகுமார் புகழாரம்