பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான்; அதெல்லாம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி பல்டி
பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி
தமிழக சட்டப்பேரவை கூடியதும் 3 அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததை கண்டித்து பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
இபிஎஸ் விளக்கம்
தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. பாஜகவுடனான கூட்டணி குறித்த கூட்டணியில் அங்கம் வகிப்போம். பாஜகவுடனான கூட்டணி குறித்த கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம்.
கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா கூறினார் என பேசியுள்ளார்.