எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று..!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகராமாகியுள்ள நிலையில் ,எடப்பாடி அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கும் பணியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மனைவிக்கு கொரோ தொற்று
இந்த நிலையில் அவரது மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராதா மருத்துவர் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னை பார்க்க வரும் தனது ஆதரவாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.