அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அச்சத்தில் அதிமுகவினர்
ஓ.பி.எஸ் வியூகம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார். அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சென்னை அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது -
அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர். வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு
இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.