மகளிர் தினத்தையொட்டி அதிமுக அலுவலகத்தில் வளர்மதிக்கு கேக் ஊட்டி விளையாடிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

O.Panneerselvam InternationalWomen'sDay Women'sDayCelebration ADMKOffice EdappadiK.Palaniswami
By Thahir Mar 08, 2022 07:22 PM GMT
Report

நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள்,பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து மகளிர் பணியாற்றும் இடங்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மகளிர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

கேக்கை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து கேக் வெட்டினர்.அப்போது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கேக் ஊட்டுவது போன்று ஏமாற்றினார்,பின்னர் வளர்மதிக்கு எடப்பாடி பழனிசாமி கேக்கை ஊட்டினார்.இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது.இதையடுத்து சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் சிலர் மத்தியில் கருத்து நிலவியது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்தார்.இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.