Edappadi K Palaniswami History in Tamil ; வெல்லம் வியாபாரி டூ தமிழ்நாடு முதலமைச்சர் வரை - இபிஎஸ் கடந்து வந்த பாதை

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir May 08, 2023 08:51 AM GMT
Report

வெல்லம் வியாபாரியாக  வாழ்க்கை தொடங்கி தமிழ்நாடு முதலமைச்சர் வரை எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதையை சற்று விரிவாக பார்க்கலாம்.

பிறப்பு முதல் படிப்பு வரை 

சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் எனும் சிற்றுாரை பிறப்பிடமாக கொண்ட எடப்பாடி பழனிசாமி மே 12 1964 ஆம் ஆண்டு கருப்ப கவுண்டர் தவசியம்மாள் இணையருக்கு 2வது மகனாக பிறந்தார் இவரின் மனைவி ராதா இவர்களுக்கு மிதுன்குமார் என்ற மகன் உள்ளார்.

Edappadi K Palaniswami History in Tamil ; வெல்லம் வியாபாரி டூ தமிழ்நாடு முதலமைச்சர் வரை - இபிஎஸ் கடந்து வந்த பாதை | Edappadi K Palaniswami History In Tamil

பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஈரோடு வாசவி கல்லுாரியின் விலங்கியல்துறையில் சேர்ந்த இவரின கல்லுாரிப் படிப்பு பாதியில் நின்று போனது.

வெல்ல வியாபாரி முதல் அமைச்சர் பதவி வரை 

இதையடுத்து குடும்ப சூழல் காரணமாக எடப்பாடி பழனிசாமி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் சந்தைகளில் வெல்லம் வியாபாரம் செய்து வந்தார்.

வெல்ல வியாபாரியாக தனது வாழ்க்கையை கடந்து கொண்டு வந்த அவரை முதன் முதலாக அரசியலில் கொண்டு வந்தார் அப்போதை அதிமுக அமைச்சர் செங்ககோட்டையன்.

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்ட அவருக்கு 1974 ஆம் ஆண்டு கோணேரிப்பட்டி கிளைச் செயலாளராக அதிமுகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

Edappadi K Palaniswami History in Tamil ; வெல்லம் வியாபாரி டூ தமிழ்நாடு முதலமைச்சர் வரை - இபிஎஸ் கடந்து வந்த பாதை | Edappadi K Palaniswami History In Tamil

பின்னர் 1990 ஆம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், 1991ல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும்,

1993ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும் அதன் பின்னர் 2001ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவராகவும், 2006ல் கழக கொள்கை பரப்புச் செயலாளராக அடுத்தடுத்த நிலைக்கு அரசியலில் முன்னேறினார். 

அதை தொடர்ந்து நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும் 2014 ஆம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் 2016ல் பொதுக்பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சில சென்றதை அடுத்து 2017 ஆம் ஆண்டு அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று அங்கம் வகித்தார்.

Edappadi K Palaniswami History in Tamil ; வெல்லம் வியாபாரி டூ தமிழ்நாடு முதலமைச்சர் வரை - இபிஎஸ் கடந்து வந்த பாதை | Edappadi K Palaniswami History In Tamil

இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இபிஎஸ் பெற்ற வெற்றி மற்றும் தோல்வி 

1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பெற்ற வெற்றி மூலம் முதன் முறையாக சட்ட மன்றத்தில் நுழைந்தார். பின்னர் மீண்டும் 1991 ஆம் ஆண்டு சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையை தோல்வியை சந்தித்தார்.

பின்னர் அதே 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Edappadi K Palaniswami History in Tamil ; வெல்லம் வியாபாரி டூ தமிழ்நாடு முதலமைச்சர் வரை - இபிஎஸ் கடந்து வந்த பாதை | Edappadi K Palaniswami History In Tamil

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு 4வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பொதுப்பணித்துறை அமைச்சரானார்.

1998 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 1999 ஆம் ஆண்டு 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு 2 முறையும் தோல்வியை அடைந்தார்.