அதிமுகவின் பிளவுக்கு திமுக தான் காரணம் - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் என சசிகலா பேட்டி. அதிமுகவில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு
தற்போது ஓபிஎஸ் ஒரு பிரிவாகவும், ஈபிஎஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்ற்னர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சசிகலாவிடம், பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவிற்கு காரணமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன்; இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கருதுகிறேன்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம். திமுக தான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசு காரண இல்லை என தெரிவித்துள்ளார்.