அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஓபிஎஸ் வழக்கு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
குஷியில் ஈபிஎஸ் தரப்பு
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது அதன்படி , அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்றும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்த நிலையில் தீர்ப்பு சாதகமாக அமைந்த நிலையில், தொண்டர்களை சந்திக்க அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதே சமயம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், வழக்கு நாளை விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வு அறிவித்துள்ளது, இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி ,அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் ஈபிஎஸ்