ஒற்றை தலைமை விவகாரம் - ஈ.பி.எஸ்.க்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு - வெளியான தகவல்
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.
உயர்நீதிமன்றம் மறுப்பு
வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் ஜூலை 11ல் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு
சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு 2440க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்போ ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கூறி வருகிறது.
ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு
இந்நிலையில், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. போடிநாயக்கனூர், பழனிசெட்டிபட்டி தீபன் சக்கரவர்த்தி என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.