அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு..!

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 05, 2022 05:53 PM GMT
Report

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு 

சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு..! | Eps Appeal In The Supreme Court

நாளை இந்த வழக்கு விசாரணை வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஈபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு 

ஓ.பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், அதிமுகவின் செயல்பாட்டிற்கும்,

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பி.எஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.