மீண்டும் அமைச்சர் பொன்முடி மேல் குறி வைத்த ED - நேரில் ஆஜராக உத்தரவு!
அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் பொன்முடி
உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி 2006-2011ல் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அவருடைய மகன் கவுதம சிகாமணி, மற்றும் அவரது உறவினர்கள்
அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி குறுகிய காலக்கட்டத்துக்குள் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
ED சம்மன்
தொடர்ந்து, செம்மண் குவாரியில் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்ததில், ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இநிந்லையில், மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.