அமைச்சர் பொன்முடி காரில் சிக்கிய ஆவணங்கள் - தீவிரமடையும் சோதனை!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்குத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அமைச்சர் பொன்முடி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள வீடு அலுவலகங்கள், விழுப்புரம் பகுதியில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 4 மணிநேரமாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஆவணங்கள்
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நிறுத்தபினட்டிருந்த காரில் அமலாக்குத்துறை சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு முக்கிய ஆவணங்கள் சில கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஆவணங்கள் கைப்பற்றிய பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாக கூறுகின்றனர். டிஜிட்டல் முறையில் ஏதேனும் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பதை அறிய அமலாக்குத்துறை தடவியல் நிபுணர்களை வரவழைத்ததாக கூறப்படுகிறது.