அரவிந்த் கெஜ்ரிவால்; ஜாமின் கொடுத்தால் என்ன நடக்கும்? ED அடுக்கும் அதிரடி பாயிண்ட்கள்!

Delhi Arvind Kejriwal Enforcement Directorate
By Swetha May 10, 2024 06:44 AM GMT
Report

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால். தன்னுடைய கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுமா?

அரவிந்த் கெஜ்ரிவால்; ஜாமின் கொடுத்தால் என்ன நடக்கும்? ED அடுக்கும் அதிரடி பாயிண்ட்கள்! | Ed Oppose Bail For Delhi Cm Arvind Kejriwal

என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராத சூழலில், அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. அதே நேரத்தில் ஜாமீன் வழங்கினால், எம்மாதிரியான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து அமலாக்கத்தறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்; ஜாமின் கொடுத்தால் என்ன நடக்கும்? ED அடுக்கும் அதிரடி பாயிண்ட்கள்! | Ed Oppose Bail For Delhi Cm Arvind Kejriwal

இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இன்னும் நாங்கள் பதில் அளித்து முடிக்கவில்லை என்று அமலாக்கத்துறை கூறியது.

ஜாமீன் பெறுகிறாரா அர்விந்த் கெஜ்ரிவால்!! உச்சநீதிமன்றம் சொன்ன பாய்ண்ட்

ஜாமீன் பெறுகிறாரா அர்விந்த் கெஜ்ரிவால்!! உச்சநீதிமன்றம் சொன்ன பாய்ண்ட்

ஜாமின்

ஜாமீனில் வெளியே வந்தாலும் அரசு கோப்புகளில் எதுவும் கையெழுத்திட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் தரப்பு இடையே பரபரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுமா என்பது தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்; ஜாமின் கொடுத்தால் என்ன நடக்கும்? ED அடுக்கும் அதிரடி பாயிண்ட்கள்! | Ed Oppose Bail For Delhi Cm Arvind Kejriwal

இதற்கிடையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அதில், சட்டம் அனைவருக்கும் சமமானது. பிரசாரம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது.

அரசியல் அமைப்பு படியோ அல்லது சட்டப்பூர்வ உரிமையும் இதற்கும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும், எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளருக்கு கூட தனது சொந்த பிரச்சாரத்திற்காக காவலில் இருந்தால் இடைக்கால ஜாமீன் அளிக்கப்படாது என்று அமலாக்கத்துறை தெரிவிக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்; ஜாமின் கொடுத்தால் என்ன நடக்கும்? ED அடுக்கும் அதிரடி பாயிண்ட்கள்! | Ed Oppose Bail For Delhi Cm Arvind Kejriwal

 கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ள நிலையில், நாளை தனது முடிவை உச்ச நீதிமன்றம் தெரிவிக்க உள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு கவலையை கொடுத்துள்ளது.