விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை..! டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 முறை சம்மன்..!
கலால் கொள்கை வழக்கில் நேரில் ஆஜராக மீண்டும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்கின் பின்னணி
மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக கடந்த 2021-22-ஆம் நிதி ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.
இதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி டெல்லி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது உத்தரவிட்டது. தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.
4-வது சம்மன்
இந்த விசாரணைக்கு ஆஜராகும் படி தான் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4-வது முறையாக வரும் ஜனவரி 18-ஆம் தேதி சம்மன் அனுப்பியுள்ளது.
கடைசியாக கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்ட நிலையில், அவர் நேரில் ஆஜராகவில்லை.
அதே நேரத்தில், ஆம் ஆத்மீ கட்சி தலைமை ஜனவரி 18 முதல் 20 வரை மக்களவை தொடர்பான கட்சிப் பணிகளுக்காக கெஜ்ரிவால் கோவா செல்வார் என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.