எல்லாம் போலி - எனக்கு எதிரா fake documents ED ரெடி பண்றாங்க - செந்தில் பாலாஜி மனு..!!
இன்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மேல்முறையீடு மனுவில், தீர்ப்பு வழங்கவுள்ளது சென்னை முதன்மை நீதிமன்றம்.
செந்தில் பாலாஜி
நேற்று 15-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனுவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், தான் நேற்று முன்தினம் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மணி சொந்தமான இடங்களிலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் கரூர் வீட்டிலும் வருமானவரி துறை சோதனை நடத்தியுள்ளது.
போலியான..
தீர்ப்பு வழங்கப்படவுள்ள சில தினங்களுக்கு முன் சோதனை நடப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், சில ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில், செந்தில் பாலாஜி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிராக அமலாக்கத்துறை போலியான ஆவணங்களை தயார் செய்து வருவதாக குறிப்பிட்டு தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.