அசோக் வீட்டில் மீண்டும் ரைட் - அதிரும் கரூர்...அடுத்தடுத்த நெருக்கடியில் செந்தில் பாலாஜி..!
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி வழக்கு
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் கைதான சூழலில், அப்போதிலிருந்து தொடர் சிக்கலில் செந்தில் பாலாஜி இருக்கின்றார்.
பல முறை அவரின் ஜாமீன் மனு நிராகரிப்பட்டுள்ள நிலையில், நாளை சென்னை முதன்மை நீதிமன்றம் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தீர்ப்பளிக்கவுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மீண்டும் வருமானவரி துறையின் ரைட் அவரின் பக்கம் திரும்பியுள்ளது.
மீண்டும் ரைட்...?
கரூரில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ராம்நகர் பகுதியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வரும் ஆடம்பர பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணியின் கொங்கு மெஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.