திடீரென குலுங்கிய நியூயார்க் சிட்டி - நிலநடுக்கத்தால் அதிர்ந்த மக்கள்!
நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்
அமெரிக்காவின் முக்கிய நகராக விளங்குவது நியூயார்க் சிட்டி. இங்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 116.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள லெபனான் நியூஜெர்சி அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும்,
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பும், உயிர் தேசமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நிலநடுக்கம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. ‛‛அமெரிக்கா நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் தூதரகத்தை madad.newyork@mea.gov.in மூலம் தொடர்பு கொள்ளலாம்’’ எனவும் தெரிவித்துள்ளது.