கடலுக்குள் மூழ்கி வரும் நியூயார்க் நகரம்? பகீர் கிளப்பும் நாசாவின் தகவல்!

New York
By Sumathi Sep 30, 2023 08:16 AM GMT
Report

நியூயார்க் நகரம் மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்று என்பது நாம் அறிந்ததே. இரவை பகலாக்கும் வண்ண விளக்குகள், வானளாவிய கட்டிடங்கள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்கள் என மிகவும் பெயர் போன நகரம்.

கடலுக்குள் மூழ்கி வரும் நியூயார்க் நகரம்? பகீர் கிளப்பும் நாசாவின் தகவல்! | Nasa Says New York Is Sinking Weight Of Building

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிலத்தில் அதிக அளவு கட்டுமானங்களை ஏற்படுத்துதல், குறிப்பாக எந்தவொரு இடைவெளியும் இல்லாத அளவுக்கு கட்டுமானங்களை கட்டுதல் ஆகியவை புவி பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதிர்ச்சி தகவல்

மித மிஞ்சிய கட்டிடங்களால் நிலப்பரப்பின் உயரம் குறைகிறது. இந்த மாற்றங்கள் உடனடியாக நடந்து விடுவதில்லை. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம். சராசரியாக பெரு நகர பகுதிகள் ஆண்டுக்கு 1.6 மில்லி மீட்டர் அளவுக்கு குறைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடலுக்குள் மூழ்கி வரும் நியூயார்க் நகரம்? பகீர் கிளப்பும் நாசாவின் தகவல்! | Nasa Says New York Is Sinking Weight Of Building

இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சும் மோட்டார்களின் அதிக பயன்பாடு, மாசுபட்ட நீரை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் ஊசி கிணறுகள் உள்ளிட்டவை முக்கிய காரணியாக இருக்கலாம்.

மனித உடலை உரமாக்கும் நியூயார்க்! எப்படி சாத்தியப்படுகிறது?

மனித உடலை உரமாக்கும் நியூயார்க்! எப்படி சாத்தியப்படுகிறது?

பூமியின் மாறிவரும் காலநிலை உலகெங்கிலும் உள்ள கடல்களை உயரத் தள்ளுவதாலும் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி ஏற்படம் வெள்ளங்கள், புயல்கள் உள்ளிட்டவையும் நிலத்தின் உயரம் குறைவதற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.