மஞ்சள் நிறமாக மாறிய நியூயார்க் நகரம் - மாஸ்க் அணிந்தபடி செல்லும் மக்கள்
கனடா காட்டுத் தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்த படி வெளியே செல்கின்றனர்.
காட்டுத் தீயால் காற்று மாசு
காட்டுத் தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
மஞ்சள் நிற புகைமூட்டத்தால் மேன்ஹேட்டன் நகரில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன.
மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத் தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.
கனடாவில் இந்த காட்டுத் தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் நிறமாக மாறிய நியூயார்க்
காட்டுத் தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத் தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுத் தீயின் தாக்கத்தால் நியூயார்க் நகரம் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. எனவே சுவாச பிரச்சனை உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.