மலோசியா,பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..!

Pakistan Malaysia Earthquake
By Thahir Jun 21, 2022 11:36 PM GMT
Report

மலேசியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் 

மலேசியா கோலாலம்பூரில் இருந்து மேற்கே 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மலோசியா,பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..! | Earthquake In Malaysia Pakistan

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே நேற்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.