பாகிஸ்தானில் தேர்தல் நடத்தாவிட்டால் நிலமை மோசமாகும் : இம்ரான்கான் எச்சரிக்கை

Pakistan Imran Khan
By Irumporai Jun 21, 2022 10:13 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தற்போது தேர்தல் நடத்தாவிட்டால் பாகிஸ்தான் மிகப் பெரிய பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலையினை சந்தித்து வருகிறது, இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது.

நெருக்கடியில் பாகிஸ்தான்:

அங்கு நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போராட்டக்காரர்களோடு காணொளி மூலம் உரையாடினாா்.

பாகிஸ்தானில் தேர்தல் நடத்தாவிட்டால் நிலமை மோசமாகும் : இம்ரான்கான் எச்சரிக்கை | Imran Khan Vows To Protest Against Pakistan

தேர்தல் நடத்த வேண்டும்

அப்போது அவர் பேசியதாவது: நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படாவிட்டால் மேலும் குழப்பம் பரவும்.

முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும். தற்போது உள்ள அரசானது பொருளாதாரத்தைக் கையாளும் திறனற்றது. வரும் நாட்களில் விலைகள் அதிகமாக உயரும் என குறிப்பிட்டார். 

அன்று நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்... இன்று பாகிஸ்தான் பிரதமர் : அதிரவைக்கும் தகவல்