ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்த நிலநடுக்கம்.. வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள் -வெளியான வீடியோ!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் இன்று காலை 6:45 மணியளவில்திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4.9 மற்றுட் 4.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து காலை 6:52 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 4.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர் .
அடுத்தடுத்து நிலநடுக்கம்
பலர் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளில் இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.