Wow.... இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் ‘லித்தியம் புதையல்’ கண்டுபிடிப்பு....!

Viral Video India Jammu And Kashmir
By Nandhini Feb 10, 2023 12:28 PM GMT
Report

இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் ‘லித்தியம் புதையல்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

‘லித்தியம் புதையல்’

இந்திய நாட்டில் முதன்முறையாக 5.9 மில்லியன் டன் ‘லித்தியம் இருப்பு’ ஜம்மு காஷ்மீரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. லித்தியம் படிவுகள் இரும்பு அல்லாத உலோகமாகும். இவை EV பேட்டரிகளில் பயன்படுத்துவதற்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் இந்த ‘லித்தியம் புதையல்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லித்தியம் மற்றும் தங்கம் உள்ளிட்ட 51 கனிம தொகுதிகள் அந்தந்த மாநில அரசுகளிடம் புவியியல் ஆய்வு மையம் ஒப்படைக்க உள்ளது.

இந்த லித்தியம் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த பயன்பட உள்ளது. லித்தியத்தின் மொத்த கையிருப்பில் இந்தியா 2வது அல்லது 3வது இடத்தில் உள்ளது.   

5-9-million-tonnes-lithium-jammu-kashmir-india