சட்டப்பிரிவு 370 - ஒரு தற்காலிக ஏற்பாடே..! காஷ்மீர் விவகாரம்.! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் காஷ்மீரில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Article 370
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவானது வழங்கியது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கான சட்டங்கள் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்பதை வலியுறுத்துகிறது இந்த சட்டப்பிரிவாகும்.
இதனை கடந்த 2019-ஆம் ஆண்டில் ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கமே என குறிப்பிட்டது. அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபையை கொண்டது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை கிடையாது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மூன்று வெவ்வேறு விதமான தீர்ப்பினை அளித்துள்ளது. அதில், ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல, சட்டப்பிரிவு 370-ஐ ஒரு தற்காலிகமான ஏற்படாகவே தாங்கள் கருதுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அதன் காரணமாக மாநிலத்தில் போர் நிலைமையை குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லடாக் யூனியன் பிரதேசத்தை அங்கீகரிப்பதாகவும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.