இன்னும் 200 வருஷம் தான்.. பூமி வாழவே தகுதி இல்லாத இடமா மாறும்? ஆய்வில் தகவல்!

Earthquake World Air Pollution
By Sumathi Dec 24, 2023 11:14 AM GMT
Report

பூமி வெப்பமடைவது தொடர்ந்து அதிகரிப்பதால் பாதிப்பு தீவிரமடைகிறது.

புவி வெப்பமடைதல்

பிரிட்டன், சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோவன் தலைமையிலான குழுவினர் பூமி குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 

earth and climate

மனிதர்கள் அதிகளவு மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களை வெளியிடுவதால் புவி வெப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனால் கடல்கள் வேகமாக ஆவியாகி வருகின்றன. 

முதலில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இதுதான் - விண்வெளி வரலாற்றை தொடங்கி வைத்த நாடு!

முதலில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இதுதான் - விண்வெளி வரலாற்றை தொடங்கி வைத்த நாடு!

கிரகமாக மாறும்?

அந்த நீராவி வானத்தை நோக்கிச் சென்று போர்வையைப் போல மூடுகிறது. இதன் காரணமாக பூமியில் உள்ள வெப்பம் வளிமண்டலத்தில் கலக்காமல் பூமி வெப்பமடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கடல்களில் உள்ள நீர் மறைந்துவிடும்.

uninhabitable earth

சில ஆண்டுகளில், கடல்கள் முற்றிலும் ஆவியாகிவிடும்.  மேலும், சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், பூமியின் வெப்பநிலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 

இத்தகைய பாதிப்புகளினால் 200 ஆண்டுகளில் பூமியில் பசுமை இல்ல வாயுக்களை அதிகரித்து, பூமி வெள்ளி கிரகம் போல் மாறி, மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.