முதலில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இதுதான் - விண்வெளி வரலாற்றை தொடங்கி வைத்த நாடு!

Satellites World Russia
By Jiyath Sep 05, 2023 07:35 AM GMT
Report

முதன் முதலில் விண்ணின் ஏவப்பட்ட செயற்கைக்கோள் குறித்த தகவல்கள்.

முதல் செயற்கைக்கோள்

பூமியின் சுற்றுப்பாதைக்குள் செயற்கைக்கோளை முதன் முதலில் ஏவி வெற்றி கண்ட நாடு சோவியத் ரஷ்யா ஆகும். மனிதனால் ஏவப்பட்ட முதல் செயற்க்கைகோளின் பெயர் "ஸ்புட்னிக் 1 (Sputnik 1).

முதலில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இதுதான் - விண்வெளி வரலாற்றை தொடங்கி வைத்த நாடு! | Sputnik 1 First Artificial Satellite I

இதன் மூலமே விண்வெளி வரலாறு தொடங்கியது எனலாம். "ஸ்புட்னிக்" என்ற பெயர் "உலகின் பயணத் துணை" என்பதற்கான ரஷ்ய வார்த்தையிலிருந்து வந்தது. 

தற்போது கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் விண்வெளி மையத்தில் இருந்து அக்டோபர் 04, 1957 அன்று சோவியத் R-7 ராக்கெட்டில் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

ஸ்புட்னிக் 1

ஸ்புட்னிக் 1 என்கிற செயற்கைக்கோள் ஒரு கூடைப்பந்து அளவிற்கு பெரியது. இது 53 செ.மீ. விட்டமும், 83.6 கிலோ எடையும் கொண்டது. இதில் நான்கு ஆண்டனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை 8 அடி நீளம் கொண்ட இரண்டு ஆண்டனாக்களும், 10 அடி நீளம் கொண்ட இரண்டு ஆண்டனாக்களும் ஆகும்.

முதலில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இதுதான் - விண்வெளி வரலாற்றை தொடங்கி வைத்த நாடு! | Sputnik 1 First Artificial Satellite I

ஸ்புட்னிக் – 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக பூமியை 98 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றி வந்தது. இது இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்களை அனுப்பியது.

இந்த செயற்கைக்கோள் 92 நாட்கள் பூமியைச் சுற்றியது. அதன் பிறகு 1958ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று பூமியின் வளிமண்டலத்தின் உள்ளே நுழைந்து எரிந்து போனது.

ஆய்வுகள்

உயரிய காற்று மண்டலங்களின் அடர்த்தியை கண்டறிய ஸ்புட்னிக் - 1 உதவியாக இருந்தது. இது கோளப்பாதை மாற்றத்தின் வழியே கணக்கிடுதலை செய்தது. மேலும் அயன மண்டலத்தில் நிகழக்கூடிய ரேடியோ சைகைகளைக் கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்பியது.

முதலில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இதுதான் - விண்வெளி வரலாற்றை தொடங்கி வைத்த நாடு! | Sputnik 1 First Artificial Satellite I

செயற்கைக்கோளில் அதிக அழுத்தம் கொண்ட நைட்ரஜன் இருந்ததால், ஸ்புட்னிக் - 1 முதன் முதலில் எரிகற்களை கண்டுபிடிக்கவும் உதவியாக இருந்தது. வெளி மேல்பரப்பில் எரிகற்கள் நுழைவதனால் உள்ளுக்குள்ளே ஏற்படும் காற்றழுத்தக் குறைவினால் புவிக்கு அனுப்பப் படுகின்ற தட்பவெப்ப தகவல்களை அறியவும் உதவியாக இருந்தது.