அதிக வியர்வை, சோர்வு; ஹார்ட் அட்டாக் வரலாம் - உடனே கவனிங்க..
ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்காக அறிகுறிகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
ஹார்ட் அட்டாக்
ஐந்தில் நான்கு இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்கின்றன. வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும். பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு ஆண்களுக்கு ஏற்படுவதை விட சில வேறுபட்ட அறிகுறிகளை கொண்டிருக்கக் கூடும்.
ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பி பிழைத்த பெண்களைக் கொண்டு ஹார்வர்ட் ஹெல்த் சர்வே ஒன்றை மேற்கொண்டது. அதன்படி வெளியிடப்பட்ட அறிக்கையில், அதீத சோர்வு, தூக்கம் என்பது பிரச்சனை இல்லாமல் இருந்து திடீரென தூங்குவதில் சிக்கல் மற்றும் தொந்தரவு ஏற்படுவது அல்லது மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் அது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறி.
அறிகுறிகள்
இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு கால் செய்து விட்டு, அது வரும் வரையிலான நேரத்திற்குள் ஆஸ்பிரின் மாத்திரையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கலாம். ஆஸ்பிரின் இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
சீரான டயட், தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செல்வது அல்லது ஒர்க்கவுட்செய்வது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவது, புகை, மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பது இதிலிருந்து தப்பிக்கும் அபாயம் குறைவு.
சர்வேயில் பங்கேற்ற சுமார் 95% பெண்கள் தங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே சில அசாதாரண உணர்வுகளை அனுபவித்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.