ஹார்ட் அட்டாக் இந்த வயசு ஆண்களையும் பெண்களையும் ரொம்ப பாதிக்கும் ..!
வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்கும் வரும் நோயாக மாறிவருவது ஹார்ட் அட்டாக் தான். சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கூட தெரியாமல் இருக்கின்றனர்.
ஏனெனில் பெரும்பாலான மாரடைப்புகள் தெளிவான அறிகுறிகளுடன் வருவதில்லை. இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது மாரடைப்புக்கான உடனடி மருத்துவ உதவியை பெண்கள் குறைவாகவே நாடுகின்றனர்.
ஏனெனில், பெண்களால் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண முடியவில்லை. பெரும்பாலான பெண்கள் தங்களின் குடும்பத்தை முதன்மைப்படுத்தி, தங்களின் உடல்நிலையை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு அந்த அறிகுறிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான மாரடைப்பு வரும் நோயாளிகள் அதிகபட்சமாக மரணத்தை தான் தழுவுகின்றனர்.
இருப்பினும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மாரடைப்பால் இறக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
அதுமட்டுமின்றி, ஆண்களை விட பெண்களுக்கு முதல் மாரடைப்பு ஏற்பட்ட 12 மாதங்களுக்குள் இரண்டாவது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சான்றுகள் கூறுகின்றன.
பெண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகும்.
ஏனெனில், இந்த அறிகுறிகள் லேசாகவே இருக்கும், அதுமட்டுமின்றி, இவை நெஞ்செரிச்சல் போன்றே இருக்கும்.
குறிப்பாக மாரடைப்பு ஏற்படும் போது பெண்களுக்கு மார்பு பக்க வலி அல்லது அசௌகரியம் குறைவாகவே இருக்கும்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு மூச்சுத் திணறல், அடிவயிற்றில் அசௌகரியம், தலைச்சுற்றல், மயக்கம், மேல் முதுகுப் பகுதியில் அழுத்தம் மற்றும் தீவிர சோர்வு போன்ற அறிகுறிகள் அடிக்கடி ஏற்படும்.
மருத்துவ ரீதியாக ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும் மாரடைப்புக்கு வேறுபாடு இருப்பதற்கான காரணம் என்ன என்றால், இரு பாலினத்தை சேர்த்தவர்களின் கரோனரி தமனிகளின் பாதிப்பு தான்.
பொதுவாக ஆண்களுக்கு பெரிய கரோனரி தமனியில் தான் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகும்.
ஆனால், பெண்களுக்கு சிறிய இரத்த நாளங்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் அவர்களால் அறிகுறிகளை உடனடியாக அறிய முடிவதில்லை