சும்மாவா..! நியூஸியை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் - பயிற்சியாளர் இந்த CSK வீரர் தான்!

Chennai Super Kings Cricket Afghanistan Cricket Team Sports T20 World Cup 2024
By Jiyath Jun 09, 2024 10:59 AM GMT
Report

டி20 உலகக்கோப்பையில் 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு போட்டியில் நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

சும்மாவா..! நியூஸியை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் - பயிற்சியாளர் இந்த CSK வீரர் தான்! | Dwayne Bravo Major Role In Afghanistan Victory

மேலும், இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் பிராவோ உள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்களா..? பிரபல வீரர் பளீச் பதில்!

கிரிக்கெட் வீரர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்களா..? பிரபல வீரர் பளீச் பதில்!

அஜய் ஜடேஜா

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்காக மட்டும் அவரை பவுலிங் ஆலோசகராக ஆப்கானிஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்களை பற்றி புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட முடியும் என அணி நிர்வாகம் கருதுகிறது.

சும்மாவா..! நியூஸியை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் - பயிற்சியாளர் இந்த CSK வீரர் தான்! | Dwayne Bravo Major Role In Afghanistan Victory

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போதும் தங்களது அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவை ஆப்கானிஸ்தான் அணி நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.