கடலில் மூழ்கிய துவாரகா; இனி நீர்மூழ்கியில் பார்வையிடலாம் - அரசு தகவல்

Gujarat
By Sumathi Dec 30, 2023 09:55 AM GMT
Report

கடலில் மூழ்கிய துவாரகா நகரை நீர்மூழ்கியில் பார்வையிட ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

துவாரகா

அரபிக் கடலில் மூழ்கிய துவாரகா நகரம் குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ததில் தலைமையேற்று நடத்திய அலோக் திரிபாதி எழுதிய நூலில், மிகப்பெரிய துறைமுகமாக துவாரகா இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் கல் நங்கூரங்கள் கிடைத்தன.

submarine-tourism-in-lost-city-dwarka

பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கல் அமைப்பு, வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அதனை, கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில் சுமார் 7,500 ஆண்டுகள் முதல் 9,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக்கூடும் என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

1 கிலோ மீட்டர் சாலை தான்; 18 கோடிக்கு பதில் ரூ.250 கோடி ரூபாய் செலவு - அதிரவைக்கும் அறிக்கை

1 கிலோ மீட்டர் சாலை தான்; 18 கோடிக்கு பதில் ரூ.250 கோடி ரூபாய் செலவு - அதிரவைக்கும் அறிக்கை

 சிறப்பு நீர்மூழ்கி

இந்நிலையில், குஜராத் சுற்றுலா துறை முதன்மை செயலாளர் ஹரித் சுக்லா, அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரை பார்வையிட சிறப்பு நீர்மூழ்கியை தயாரிக்க மும்பையை சேர்ந்த மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த நீர்மூழ்கி குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

Gujarat to launch country

ஒரு நேரத்தில் 30 பேர் நீர்மூழ்கியில் பயணம் செய்யலாம். இதில் 24 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் 2 மாலுமிகள், 2 நீச்சல் வீரர்கள், ஒரு வழிகாட்டி, ஒருதொழில்நுட்ப நிபுணர் பயணம் செய்வார்கள். அவசர கால தேவைக்கான மருந்துகள், ஆக்சிஜன் முகக்கவசம், ஸ்கூபா உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கவசங்கள் நீர்மூழ்கியில் இருக்கும்.

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் அமைக்கப்படும். கடலுக்கு அடியில் 300 அடி ஆழத்தில் நீர்மூழ்கி பயணம் செய்யும். சுற்றுலா பயணிகள் துவாரகா நகரின் அழகை ரசிக்க நீர்மூழ்கியில் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

துவாரகா நகரம் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்க முடியும். வரும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது தீபாவளி பண்டிகையின்போது நீர்மூழ்கி ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.