பிரபாகரன் மகள் பெயரில் போலியாக நிதி வசூல் மோசடி - பகீர்
பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நிதி மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி சேகரிப்பு
பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா இருவரும் ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளனர் என கூறப்பட்டது. பின்னர் மதிவதினி, துவாரகா இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. துவாரகா தலைமையில் ஒரு அரசியல் இயக்கம் தொடங்கப்படக் கூடும் எனவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில் டெலோ தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பே ஒரு நிதி சேகரிப்புக்கான நடவடிக்கைதான். சுவிட்சர்லாந்தில் இப்படி ஒரு நிதிசேகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
நிதி மோசடி
ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டும் விட்டது. இதனைத் தொடர்ந்து பிரபாகரன் மகள் துவாரகா, லண்டனில் இருக்கிறார்; அவர்தான் இவர் என பல இடங்களுக்கு அழைத்து சென்று நிதி சேகரிப்பு முயற்சிகள் நடைபெறுகிறது.
அப்போது நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் பிரபாகரன் மகள் துவாரகா இல்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. ஒரு இனத்துக்காக குடும்பத்தையே அர்ப்பணித்தவர் தம்பி பிரபாகரன். அவரை இவ்வாறு இழிவுபடுத்துவது சரியானது அல்ல. ஆகையால் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.