எந்த கொம்பனாலும் அதை மட்டும் செய்யவே முடியாது - அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை
தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் முழு சம்மதத்தை பெற்றால் தான் மேகதாது அணை கட்ட முடியும். எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் காட்டம்
மேலும், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கூறுவது தவறு. கனிமங்களுக்கான உரிமைத்தொகை, பசுமைத்தொகை ஆகியவற்றை செலுத்திய பின்பு தான் கனிமங்களை எடுத்துச் செல்ல முடியும்.
அரசின் அனுமதியோடு தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கூறினார். தொடர்ந்து, எம் சாண்ட் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச் சென்றதாக இதுவரை 21 ஆயிரத்து 163 லாரிகள் பிடிபட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு சிறிய கல்லை கூட அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.