மீண்டும் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி - உறுதிசெய்த இபிஎஸ்!

ADMK V. K. Sasikala Edappadi K. Palaniswami O. Panneerselvam TTV Dhinakaran
By Sumathi Mar 24, 2025 08:30 AM GMT
Report

சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து இபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருங்கினையும் அதிமுக?

சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

sasikala - panneerselvam - edappadi palanisamy

அப்போது பேசிய அவர், திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. பாமக-வுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் - புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் - புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

இபிஎஸ் விளக்கம்

இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை. நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் தெரிவிப்போம். தவாக வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை.

மீண்டும் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி - உறுதிசெய்த இபிஎஸ்! | Eps On Sasikala Ops And Ttv In Aiadmk Again

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், கூட்டணி பற்றி பேசுவோம். கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான்.

கூட்டணி என்றும் நிலையானது இல்லை. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.