கூட்டிட்டு போய்ட்டார்; பெரியார்-மணியம்மை குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்த துரைமுருகன்!

Periyar E. V. Ramasamy Durai Murugan Vellore
By Sumathi Sep 23, 2023 03:34 AM GMT
Report

பெரியார்- மணியம்மை திருமணம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெரியார்- மணியம்மை

வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன், திமுக பிறந்ததற்கு வேலூர் தான் காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் கழகம் பிறந்திருக்காது. திமுக உருவாகி இருக்காது.

கூட்டிட்டு போய்ட்டார்; பெரியார்-மணியம்மை குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்த துரைமுருகன்! | Duraimurugan Regret Speech Periyar Maniyammai

திராவிடர் கழகமாக பெரியாரிடத்திலே பணியாற்றி இருந்தோம். பெரியார் எங்கள் ஊருக்கு (வேலூருக்கு) வந்தார். மணியம்மையை பார்த்தார். கூட்டிகிட்டுப் போய்விட்டார்.

துரைமுருகன் வருத்தம்

நீண்ட நாட்களுக்குப் பின் தனக்குப் பிறகு அந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா இது பொருந்தாத திருமணம் என்று அறிக்கை விட்டார். பின்னர் கழகத்தில் இருந்து வெளியேறினார். திமுக உருவானது என பேசியிருந்தார்.

கூட்டிட்டு போய்ட்டார்; பெரியார்-மணியம்மை குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்த துரைமுருகன்! | Duraimurugan Regret Speech Periyar Maniyammai

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்திற்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, துரைமுருகன், வேலூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் மணியம்மை திருமணம் குறித்து பேசும்போது பயன்படுத்திய வார்த்தைகள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன்.

பெரியார் தாடியின் ரகசியம் தெரியுமா? அப்படி என்ன செய்துவிட்டார் - ஏன் இன்றும் பேசுபொருளாகிறார்!

பெரியார் தாடியின் ரகசியம் தெரியுமா? அப்படி என்ன செய்துவிட்டார் - ஏன் இன்றும் பேசுபொருளாகிறார்!

நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். பெரியார் கொள்கைகளில் நான் எவ்வளவு பிடிப்பு உள்ளவன் என்பதை கி.வீரமணி நன்கு அறிவார்' என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.